சீதா கல்யாணம்

விருதுநகர்:வத்திராயிருப்பு அக்ரஹாரத்தில் உள்ள ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ராம நவமி உற்சவம் 9 நாட்கள் நடந்தது. மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் மடத்து சிஷ்யர்கள் பஜனை முறைப்படி சீதா கல்யாணம் நடத்தி வைத்தனர்.

ஏற்பாடுகளை சங்கர நாராயணன், ராமசந்திரன், ராமசுப்பிரமணியன், ரமேஷ், சதீஷ், கிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், ஸ்ரீகுமார் ஆகியோர் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement