ராமதாஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க., வில் ஐக்கியம்
கடலுார்: நெய்வேலியில் பா.ம.க., ராமதாசின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
நெய்வேலி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, சிறுத்தொண்டமாதேவி, வடக்கு மேலுார், மேலிருப்பு, வானதிராயபுரம் உள்ளிட்ட 17 கிராமங்களை சேர்ந்த, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் ஆதரவாளர்கள், ஆயிரம் இளைஞர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, வன்னியர் சங்க அமைப்பு செயலாளரான சுவாமிநாதன் தலைமையில், நெய்வேலி தொகுதி வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
அவர்களுக்கு சொரத்துார் ராஜேந்திரன் சால்வை அணிவித்து கவுரவித்தார். வரும் தேர்தலில் அ.தி.மு.க., விற்கு ஆதரவாக சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், தேர்தல் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், என்.எல்.சி., அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெற்றிவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திருமுல்லைவாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும்
-
திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்:"திக் திக்" திகிலில் கட்சி தொண்டர்கள்!
-
புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; ராகுல் வாக்குறுதி
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
-
அரசு பஸ்சில் தவெக விளம்பரம்; மென்பொருளை 'ஹேக்' செய்து விட்டதாக நிர்வாகம் தகவல்
-
சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்
-
சாத்தான்குளம் வழக்கு; போலீசார் 9 பேருக்கான தண்டனை இன்று அறிவிப்பு