சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்

மதுரை: சனாதன தர்மத்தை மதிப்போருக்கு சட்டசபை தேர்தலில் வாக்களித்து, தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் ஹரிஹர முத்தைய்யர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் பராபர தமிழ் ஆண்டு பஞ்சாங்க வெளியீட்டு விழாவில்

ஹரிஹர முத்தைய்யர் பேசியதாவது: நாட்டை ஆள்வோரை நிர்ணயிக்கும் சக்தி உடையவர்களாக ஹிந்துக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பிராமணர்கள் வாக்கு 44 லட்சமாக உள்ளது.சில கட்சிகள் ஹிந்து விரோத போக்கை கடைபிடிப்பது முரணாக உள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிராக செயல் படுவோருக்கு நாம் துணை போகக் கூடாது.

காசி, அயோத்தி, ராமேஸ்வரம் என இந்தியா முழுக்க பாரதப் பிரதமர் மோடி ஹிந்துக்களுக்கு ஆதரவாக கோயில்களை புனரமைத்தல், சுத்தப்படுத்துதல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் வாக்களிப்பதாக, தமிழ்நாடு பிராமண சமாஜம் தீர்மானம் செய்துள்ளது. இந்த தேர்தலில் சனாதன தர்மத்தை பின்பற்றுவோர்க்கு எங்களது முழு வாக்கும் இருக்கும்.

முழுக்க முழுக்க சனாதன விரோத போக்கை மட்டுமே கடைப்பிடித்து வரும் தீய சக்திகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில இணை செயலாளருமான நெல்லை பாலு , எல்லீஸ் நகர் எஸ் எஸ் காலனி, தபால் தந்தி நகர், முத்துப்பட்டி, கோச்சடை உட்பட 13 தமிழ்நாடு பிராமண சமாஜம் கிளைகளின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு பிராமண சமாஜ மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன், தலைவர் எஸ். ரவி, பழனி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் நன்றி கூறினார்.

Advertisement