ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
வேலூர்: ராணிப்பேட்டையில் தன் தந்தையும், அமைச்சருமான காந்தி போட்டியிடுவார் என, திமுக தலைமையால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தியும் ஒருவர். இவருக்குப் பதிலாக ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. இதனால், அமைச்சர் காந்தி அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வினோத் காந்தியும் பிரசாரத்தை துவக்காமல் இருந்து வந்தார்.
ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் நானே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு அவர் கோரிக்கை விடுத்து வந்ததாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும், தன்னுடைய தந்தையே மீண்டும் போட்டியிடுவார் என்று திமுக வேட்பாளரும், அமைச்சர் காந்தியின் மகனுமான வினோத் காந்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதிக்கும், எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தந்தைக்காக மகன் விட்டுக் கொடுத்தாலும், ராணிப்பேட்டை வேட்பாளர் மாற்றம் தொடர்பாக திமுக தலைமையிடம் இருந்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி காந்தியையே தவறாக மதிப்பிட வேண்டாம் ஜெயித்து வந்தபின் காந்தி அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார் என்பது உண்மை. இதுபோன்று இன்னும் பல விநோதங்கள் கட்சியின் தலைமைக்கு எதிராக நடை பெற உள்ளன
திமுக தலைமை... கட்டுப்பாடு போய் விட்டது போல் தெரிகிறது... தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் உள்ளது.
இதெல்லாம் சரி, தலைமை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கலையேப்பா? வேட்பு மனுதாக்கல் செய்ய கெடுவும் முடிஞ்சிடுச்சே?
கோவிந்தா கோ விந்தா.
மகன் நின்னு ஜெயிச்சாலும் துட்டு சேர்க்கறதுல எம் எல் ஏவா இருக்கப்போறது அப்பாதான். அப்பா நின்னு ஜெயிச்சாலும் துட்டு சேர்க்கறதுல எம் எல் ஏவா இருக்கப்போறது மகன்தான். எப்படி இருந்தாலும் பதவி குடும்பத்துக்குள்ளேதான். ஆனா இந்த டிராமா எதுக்கு போட்டாங்கன்னுதான் புரியலை
அண்ணே,அ.ராசா செஞ்சத விடவா நான் பெருசா தப்பு பண்ணிட்டேன் அப்புடின்னு தலைமையிடம் காந்தி, காந்தீய வழியில் புலம்பி இருக்கலாம். தலைமையும் யோசித்துப் பார்த்து மனம் இரங்கி இருக்கலாம்.
தெரியும் மவன் நின்ன்றால் தோற்க அடிக்க படலாம். ஜெயித்தாலும் அமைச்சர் பதவி கிடாய்கது. கூடி கழிச்சு பார்த்து அப்பனே தேர்தலில் நிக்க வச்சுட்டானுவ.
ராகுல் காந்தியை மகிழ்விப்பதர்காக காங்கிரசிர்கு கூடுதலாக ஒரு சீட் கொடுக்க எண்ணி அந்த பொறுப்பை தன் அடிவருடியிடம் கொடுத்துவிட்டதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். மாணிக்கம் தாகூர் இதுவரை இது குறித்து எந்த வீர பதிவையும் போடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
திமுக தலைமை மூன்று தலைமுறையாக தன்னுடைய வாரிசுகளுக்கே பதவிகளை வழங்கி அழகு பார்க்கிறது. இங்கு என்னடான்னா அதே திராவிட உடன்பிறப்பு தன்னுடைய மகனுக்கு சீட் வழங்கியதால் வருத்தமாம். நீங்க எல்லாம் ஏமாறும் தமிழக மக்கள் இருக்கும் வரை, நன்றாக வருவீர்கள்.
தீயமுக கம்பெனியில மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள். அவரு பொம்மை முதல்வர் என்பது நிரூபணம்.
அம்மா கட்சியில இதெல்லாம் நினைச்சி கூட பார்க்க முடியுமா.மேலும்
-
பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்
-
சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை: எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு
-
மகன் இறப்பில் சந்தேகம்: தாய் எஸ்.பி.,யிடம் புகார்
-
எஸ் கரிசல்குளம் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
-
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
-
முதியோர் பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்றுக்கு வசூல் : சிவகங்கையில் சங்கங்கள் மீது புகார்