அரசு பஸ் கண்டக்டர் தாக்கிய வாலிபர் கைது
புதுச்சத்திரம்: குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராஜ்குமார், 28; அரசு பஸ் தற்காலிக கண்டக்டர். இவர் கடலுார் முதுநகர்-பரங்கிப்பேட்டை வழித்தடம் பஸ்சில் கண்டக்டராக நேற்று முன்தினம் பணியில் இருந்தார்.
இந்நிலையில் இரவு 9:00 மணிக்கு, பஸ் ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, ஆலப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் மகன் கிஷோர்,24; மதுபோதையில் ஏன் சர்வீஸ் ரோட்டில் செல்லாமல், மேம்பாலம் வழியாக பஸ் செல்கிறது என கேட்டு, தகராறு செய்து கண்டக்டர் ராஜ்குமாரை தாக்கினார்.
இது குறித்து புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோரை, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்:"திக் திக்" திகிலில் கட்சி தொண்டர்கள்!
-
புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; ராகுல் வாக்குறுதி
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
-
அரசு பஸ்சில் தவெக விளம்பரம்; மென்பொருளை 'ஹேக்' செய்து விட்டதாக நிர்வாகம் தகவல்
-
சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்
-
சாத்தான்குளம் வழக்கு; போலீசார் 9 பேருக்கான தண்டனை இன்று அறிவிப்பு
Advertisement
Advertisement