உப்பளம் தொகுதியில் அமைதி நீடிக்க வேண்டும்: ஜெகத்ரட்சகன் ஆசை
புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து ஜெகத்ரட்சகன் எம்.பி., பிரசாரம் செய்தார்.
சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அனிபால் கென்னடியை ஆதரித்து வாணரப்பேட்டை புல்லுக்கடை பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஜெகத்ரட்சகன் ஆதரவு திரட்டினார்.
அப்போது, தி.மு.க., - காங்., - வி.சி., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
ஓட்டு சேகரிப்பின் போது, ஜெகத்ரட்சகன் பேசுகையில், 'தமிழகத்தில் திராவிட மடல் ஆட்சி ஏராளமான சாதனைகளை செய்து வருகிறது. புதுச்சேரிலும் அது போல் திட்டங்கள் கிடைக்க நீங்கள் தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும். அனிபால் கென்னடி தொகுதியை மிகவும் அமைதியாக வைத்திருக்கிறார். இந்த அமைதி நீடிக்க வேண்டும் என்றால் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.