சிறுகாவேரிபாக்கம் சாலை சேதம்: அடிக்கடி பஞ்சராகும் டூ - வீலர்கள்

காஞ்சிபுரம்: ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் சிறுகாவேரிபாக்கம் சுப்புரத்தினம் பிரதான சாலை உள்ளதால், டூ - வீலர்கள் அடிக்கடி பஞ்சராவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, சுப்புரத்தினம் நகர் பிரதான சாலை வழியாக பல்வேறு நகருக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த நிலையில் சுப்புரத்தினம் நகர் பிரதான சாலைக்கு புதிதாக தார் சாலை அமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement