சென்னையில் பாதி நமக்கு: அ.தி.மு.க., உற்சாகம்

7

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணியே வென்றது. அதனால், இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன், அக்கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க., நடத்திய சர்வேயில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், தி.நகர், வேளச்சேரி, ராயபுரம், விருகம்பாக்கம், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால், அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திரு.வி.க., நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு, பட்டியலின அமைப்புகள் கட்சி வேறுபாடின்றி ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியான கிறிஸ்துவர் ஓட்டுகளை, விஜய் கணிசமாக பிரிப்பார். அதனால் இந்த முறை, 16ல் பாதி தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement