'தண்ணீர் பாட்டிலை வீசி என்னை விரட்டினர்'

10

தேனி மாவட்டம் போடி தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின் அவர் அளித்த பேட்டி:

முன்னாள் முதல்வர் பழனிசாமி, பதவிக்கு வந்தது தவறான வழி. நன்றி உணர்வு இல்லாத மனிதர் தான், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக உள்ளார். அவர் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை தோல்விகளையே சந்தித்துள்ளார்; இனி வரும் காலங்களிலும் படுதோல்விகளையே சந்திப்பார்.

அ.தி.மு.க.,வில் இருந்து நானாக விலகவில்லை. அவர்கள் தான் என்னை விரட்டினர். முன்னாள் அமைச்சர்கள் உதயகுமாரும், சீனிவாசனும்தான் அதற்கு காரணம். தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, என்னை வெளியேற்றியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தான் என்னை தி.மு.க.,விற்கு விரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement