புதிய பாலம், விரிவான சாலை: இந்திய கம்யூ. வேட்பாளர் உறுதி
திருப்பூர்;திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி, நேற்று மண்ணரை பாரப்பாளையம் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தைத் துவங்கினார்.
டிரம்ஸ் குழுவினர் அதிரடியாக முழங்க, சத்யா காலனி, குளத்துப்பாளையம், தொட்டியமண்ணரை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்தது. நிர்வாகிகள் டூவீலர்களில் கொடிகளுடன் ஊர்வலமாகச் செல்ல, கூட்டணி கட்சியினர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து உற்சாகப்படுத்தினர்.
டி.பி.ஏ. காலனி மற்றும் ஏ.டி.காலனி பகுதிகளில் பேசிய வேட்பாளர் ரவி, வடக்கு தொகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் புதிய மேம்பாலங்கள் மற்றும் விரிவான சாலைகள் அமைக்கப்படும். புதிய அரசு மருத்துவமனை, அரசு கல்லுாரி கொண்டுவரப்படும். தொழில் நலன் காக்கப் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். லஞ்சம், ஊழலுக்கு இடம் கொடுக்க மாட்டேன், என வாக்குறுதி அளித்தார்.
--
இப்படி மறைச்சிட்டீங்களே!
திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி பிரசாரம் மேற்கொண்டபோது, தொண்டர்கள் கொடிகளுடன் மறைத்து நின்றதால், வேட்பாளரை பொதுமக்கள் பார்ப்பது சிரமமாக இருந்தது.
@block_B@ வெயிலுக்கு 'பிரேக்' காலை 11:15 மணி வரை பிரசாரம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயில் சுட்டெரித்ததால் காலை 10:45 மணிக்கே கொங்கு மெயின் ரோட்டில் பிரசாரம் தற்காலிகமாக முடிக்கப்பட்டது. இதனால் கே.ஜி. லே-அவுட், தியாகி குமரன் காலனி உள்ளிட்ட பகுதிகள் விடுபட்டன. வெயில் அதிகம் என்பதால் மக்கள் வெளியே வரமாட்டார்கள், மாலையில் விடுபட்ட இடங்களிலிருந்து பிரசாரத்தைத் தொடருவோம் என கட்சியினர் தெரிவித்தனர். பிரசாரத்தை முடித்த வேட்பாளர் ரவி, வெப்பத்தைத் தணிக்கத் தண்ணீர் குடித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டார்.block_B
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்