வெள்ளகோவில் தனி தாலுகா; நாம் தமிழர் வேட்பாளர் உறுதி

திருப்பூர்: காங்கயம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்மேகன், தொகுதி மக்களிடம் முன்வைத்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பி.ஏ.பி. மற்றும் கீழ்பவானி பாசன நீர் கடைமடை விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்கவும், ஆனைமலையாறு -- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவும் பாடுபடுவேன். பி.ஏ.பி. நீர் திருட்டைத் தடுத்து, உரிய நீர் பங்கீடு பெற்றுத் தருவேன். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காமல் இயற்கை முறையில் துார்வார முன்னுரிமை அளிப்பேன். தென்னை விவசாயிகளின் நலன்காக்க, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க முயற்சிப்பேன். முருங்கை சாகுபடியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கட்டமைப்பை உருவாக்கி நேரடிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவேன்.

நலிவடைந்த சிறு தொழில்களைக் காக்க மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின் கணக்கீட்டை மாதம் ஒருமுறை மாற்றவும் நடவடிக்கை எடுப்பேன். காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில் நவீன வசதிகள் மேம்படுத்தப்படும். வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.

வெள்ளகோவில் பகுதியைத் தனி தாலுகாவாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன்.

---

நாம் தமிழர் கட்சியின் சின்னம், ஏர் ஏந்திய விவசாயி. பிரசாரத்தில் ஏருடன் விவசாயி போல வலம் வருகிறார் காங்கயம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்மேகன்.

Advertisement