பா.ஜ.,வலையில் சிக்கிய அ.தி.மு.க.,வை யாராலும் காப்பாற்ற முடியாது: முத்தரசன்

போடி: ''பா.ஜ., எனும் சிலந்தி வலையில் சிக்கிய அ.தி.மு.க., வை யாராலும் காப்பாற்ற முடியாது'' என போடியில் இ.கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

போடியில் தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெ., விற்கு நம்பிக்கைக்கு உரியவராக பன்னீர்செல்வம் இருந்தார். அவரை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கினார்கள். பன்னீர்செல்வம் நல்ல முடிவு எடுத்து தி.மு.க., வில் இணைந்தார். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் நடக்கும் போட்டி அல்ல. தமிழகத்திற்கும், பா.ஜ.,விற்கும் நடக்கும் போட்டி.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வை பயன்படுத்தி வெற்றி பெற அ.தி.மு.க., வுடன் பா.ஜ.,கூட்டணி வைத்து உள்ளது. பா.ஜ., எனும் சிலந்தி வலையில் சிக்கிய 'ஈ' தான் பழனிச்சாமி. ஆண்டவனை வேண்டினாலும் சிலந்தி வலையில் சிக்கிய அ.தி.மு.க.,வை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் கால் ஊன்ற மட்டும் அல்ல, அ.தி.மு.க., வை அழித்து அந்த இடத்தில் அமர வேண்டும் என்ற பா.ஜ., வலையில் பழனிசாமி சிக்கி உள்ளார். பெரிய கட்சியான அ.தி.மு.க.,வை அடிமைப்படுத்தி விட்டார். தமிழகத்தை வஞ்சிக்கும் ஆட்சியாக பா.ஜ., உள்ளது. வலுவான கூட்டணியாக தி.மு.க., உள்ளது. என்றார்.

Advertisement