கால்பந்து: இந்தியா-ரஷ்யா மோதல்
புதுடில்லி: நட்பு கால்பந்தில் இந்தியா, ரஷ்ய அணிகள் மோத உள்ளன.
சீனாவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 10வது சீசன் (மே 1-17) நடக்கவுள்ளது. இதன் 'பி' பிரிவில் இந்திய அணி, ஆஸ்திரேலியா, ஜப்பான், லெபனானுடன் இடம் பெற்றுள்ளது. மே 2ல் நடக்கும் போட்டியில் இந்திய அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இத்தொடருக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் மியான்மர் சென்ற இந்திய அணி, இரண்டு நட்பு போட்டியிலும் (2-0, 3-2) வெற்றி பெற்றது. அடுத்து இந்திய அணி ரஷ்யா செல்ல உள்ளது. இங்கு, மூன்று போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் ஏப். 11, 14, 17 ல் சோச்சி நகரில் நடக்கும்.
இதற்கான 23 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அலெனா தேவி, அலிஷா, திவ்யானி, எலிசபெத், ஜாய்ஷினி, அபிஷ்டா, பிரித்திகா, அனுஷ்கா குமாரி, அன்விதா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும்
-
விஜயின் இன்றைய கடலுார் பயணம் திடீர் ரத்து
-
தோல்வி பயத்தால் அண்ணாமலை போட்டியிடவில்லை
-
சிக்கிய 200 கோடி ரூபாய்? நெல்லையில் அதிகாரிகள் மவுனம்
-
தே.ஜ., கூட்டணி சதி முயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: திருமாவளவன் ஆவேசம்
-
கோடிகளை கொட்டி கொடுத்து காங்கிரசை ஸ்டாலின் சார் பையில் போட்டு கொண்டார்: விஜய் விமர்சனம்
-
பொதுநலவாதிக்கு வாய்ப்பு கொடுங்கள்