மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அன்னூர், மாரியம்மன் கோவில், 36ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அணிக் கூடை எடுத்தல் நடந்தது. நேற்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் பூவோடு எடுத்து வந்தனர். காலை 11:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து அருள் பாலித்தார்.

இன்று (ஏப். 8ம் தேதி) காலையில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது.

Advertisement