விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: எச்.ராஜா பேட்டி
திருத்தணி: த.வெ.க., தலைவர் விஜயால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், எச்.ராஜா, தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின், உற்சவர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டார். தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: தி.மு.க., அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து உள்ளனர். தமிழகத்தில் முதன் முதலில், ஹிந்தியை திணித்தது, முதல்வர் ஸ்டாலின் குடும்பம் தான். அவர்கள் நடத்தும் பள்ளியில், ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. எனவே, ஹிந்தி திணிப்பு பற்றி பேச ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா?
தேர்தல் நேரத்தில் தான், பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறுகின்றனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டில், 46 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து, நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் பொய், பித்தலாட்டம் அனைத்தும், இன்னும் 25 நாட்கள் தான். பின், மோடி தலைமையிலான நல்லாட்சி அமையும்.
தி.மு.க., மற்றும் திருமாவாளனின் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஓட்டுகளை மட்டுமே த.வெ.க., தலைவர் விஜய் பிரிப்பார். தே.ஜ., கூட்டணி ஓட்டுகளை பிரிக்க மாட்டார்; விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை