மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன், 27; கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிராமி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிராமி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த கலையரசன் நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement