நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மஹாராஷ்டிராவில் அறிமுகம்
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து பல்கலைகள், பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகளிலும் நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு அறிமுகமாகிறது.
இது தொடர்பாக அம்மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டது.
அதன்படி, நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு எட்டு செமஸ்டர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டு பட்டப்படிப்பு நிறைவு பெற்றதும் மாணவர்களுக்கு இரு வாய்ப்புகள் தரப்படும். அந்த வகையில் ஹானர்ஸ் பட்டம் அல்லது ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் என, இரண்டில் ஏதேனும் ஒன்றை நான்காவது ஆண்டில் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஹானர்ஸ் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள், முதல் மூன்று ஆண்டு படிப்பில் 120 - 132 கிரெடிட்டுகள் பெற்று இருக்க வேண்டும்.
அதே போல், நான்காவது ஆண்டின் நிறைவில் 160 - 176 கிரெடிட்டுகள் பெற்றால் மட்டுமே ஹானர்ஸ் பட்டம் பெற மாணவர்கள் தகுதி பெறுவர். இது தவிர, இறுதி ஆண்டில் இன்டர்ன்ஷிப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டத்தை தேர்வு செய்யும் மாணவர்கள், ஆராய்ச்சி திட்டங்களை நிறைவு செய்து முக்கிய பாடத்தில் 12 கிரெடிட்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
நான்காவது ஆண்டில் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் பெற வேண்டுமெனில், 7.5 சி.ஜி.பி.ஏ., புள்ளிகளை ஈட்ட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பி.ஹெச்.டி., வழிகாட்டிகள் மூலம் ஆராய்ச்சி படிப்பின் திறன் மதிப்பிடப்படும்.
அதே சமயம் ஒவ்வொரு பி.ஹெச்.டி., வழிகாட்டியும் ஐந்து மாணவர்கள் வரை மட்டுமே இந்த ஆராய்ச்சி படிப்பில் கண்காணிக்க முடியும்.
அனைத்து மாணவர்களும், 'ஏ.பி.சி.,' எனப்படும் 'அகாடமிக் பேங்க் ஆப் கிரெடிட்ஸ்' தளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறவும், மீண்டும் படிப்பை தொடரவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு விதிகளுக்கு உட்பட்டு நான்காம் ஆண்டில், 'லேட்ரல் என்ட்ரி' எனப்படும் வேறு கல்லுாரிக்கு மாறிச் செல்லும் வசதியும் கிடைக்கும்.
மேலும்
-
சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி எண் வழங்க அலுவலர்கள் தீவிரம்
-
இரண்டாம் கட்டமாக ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு பணி இடங்கள் தேர்வு
-
வி.சி.கட்சி வேட்பாளர் வன்னிஅரசு கவுன்சிலரிடம் ஆதரவு திரட்டினார்
-
எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்: மாஜி அமைச்சர் சண்முகம் பிரசாரம்
-
கருணாநிதி வழியில் ஏழை குடும்பங்களில் பொருளாதார நிலையை கல்வி மூலம் உயர்த்தும் ஸ்டாலின் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
-
மனைவி மாயம் :கணவன் புகார்