வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்
சென்னை: பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வரும் பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில்; தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பாஜ அமைச்சர்களும், பாஜ முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
• தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பிரசாரம் செய்யத் தயாரா?
• நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பாஜவால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
• கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
• இவற்றுக்கெல்லாம், பழனிசாமியால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
• கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழகத்தை துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்ப இவர் விடும் சவால்களை எல்லாம் துண்டுச் சீட்டு இல்லாமல் மனப்பாடமாக சொல்லத் தயாரா?
இவருக்கு உண்மையாக ஏதோ பயம் இருக்கு , டெல்லிக்கு தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் ன்னு சொல்றாரு , அவர்கள் நிற்பது 27 தொகுதிகள் மாத்திரமே , ஆனாலும் அவர்களை பற்றி அப்பாவும் மகனும் பேசியபடி தான் , ரொம்ப பயப்படறாங்க
நாம செய்யிறதை பாசக்க செய்யுதுன்னு பழியை அவங்க மேல போடுறீங்க ..... வெரிகுட் ....
சவால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் நிரந்தரமாக மூடப்படும் என்று தீயமுக சொல்ல தயாரா? மலைகளை வெட்டி மண்ணை தோண்டியும் கொள்ளை அடித்த பணம் பல லட்சம் கோடி திரும்ப அரசு கருவூலத்தில் செலுத்தப்படுமா? 5 வருடம் 5 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செய்தாய்? வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? கேவலம் டாஸ்மாக் கொள்முதல்-விற்பனை கணக்கை நீதி மன்றம் கேட்டும் தர முடியாது என்று சொன்ன அயோக்கியர்கள் கூடாரம் தான் தீயமுக அரசு? மொழியை வைத்து தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கிறீங்களே பாவிகளா? வந்தேரிகள் ஒழிந்தால் தான் தமிழகம் விடிவு பிறக்கும்.
ஒரே மேடையில் பேசும் என்று இபிஎஸ் கூப்பிட்டதற்கு பதில் சொல்லவில்லை. கனிமொழி அம்மையார் தான் முதல்வருக்கு வேலை அதிகம் இருக்கிறது என்று சமாளித்து விட்டார். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை பாஜகவினரை ஒரே மேடையில் பேச தயாரா? நான் தயார் என்று சவால் விடுங்கள் முதல்வர் அவர்களே
மும்மொழி கொள்கை பேசி கவனத்தை திருப்பாதே. 30,000 கோடி கொள்ளை அடிச்ச பணம் என்ன ஆச்சு?
1.திருப்பரங்குன்றம் மலை meethu தீபம் ஏற்ற மாட்டோம்.... நாங்கள் இந்து விரோதி என்று சொல்ல தயாரா....
3.ஈ வே ர வின் 21 ம் பக்க தகவலை பொது மக்கள் மத்தியில் சொல்லி ஒட்டு கேட்க முடியுமா?
4.நீட் ரகசியத்தை இப்போ சொல்ல முடியுமா?
2.சிலிண்டருக்கு100 ரூபாய் ,பெட்ரோல் விலை, மாத மதம் மின் கணக்கீடு குறைத்த சம்பவம் குறித்து சொல்ல முடியுமா?
4.மதுக்கடை, மணமகில் மன்றமாகி வருவதை பற்றி சொல்ல முடியுமா?
5.பாலியல் குற்றம், போதைப்பொருள் கடத்தல், அண்ணா பல்கலை,அமைச்சர்கள் இந்து மதம் சார்ந்த அவதூறுகளை இப்போது பட்டியலிட்டு ஒட்டு கேட்க முடியுமா?
மண் கடத்தல், ஆட்கடத்தல், கொலை,கொள்ளை, லஞ்சம் பற்றி பொது வெளியில் விவாதிக்க முடியுமா?
எல்லாவற்றிக்கும் ஒரே பதில் தி மு க வை அகற்றுவது தான் .
நீட் தேர்வை ஒழிப்போம், சனாதனத்தை ஒழிப்போம், இந்துக்களை ஒழிப்போம்,கல்வி கற்பதை ஒழிப்போம், குடி மூலம் குடும்பங்களை ஒழிப்போம் என்று நீர் சொல்லத்தயாரா?
யார் அந்த சார் ? வெளிப்படையாக அறிவிக்க தயாரா ? சவாலுக்கு சவால் ~
சனா தனத்தை ஒழிப்போம் என்று சொல்லி ஸ்டாலின் வோட்டு கேட்பாராமேலும்
-
ஓசூர், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்
-
என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
-
தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு
-
செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார் வேட்பு மனு
-
எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,
-
நாடு முழுதும் 'நீட்' தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பம்