ரயில் பெட்டி கழிவறைகளில் துர்நாற்றம் : பக்தர்கள் புகார்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து ஒடிசாவின் புவனேஸ்வரர், குஜராத்தின் ஓகா செல்லும் ரயில் பெட்டிகளின் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகாரளித்தனர்.
அயோத்தியா, ஓகா, புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகின்றனர். பின் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிறு, வெள்ளியில் புவனேஸ்வர், ஓகா ரயில்கள் புறப்படுகின்றன. இதில் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் பயணிக்கின்றனர்.
ரயில் பெட்டிகளின் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாகவும், தொடர்ந்து 3 நாட்கள் பயணிப்பதால் அவதிப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் புகாரளித்தனர்.
ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement