அரங்கநாதர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கவசம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, பாதுகாப்பு கவசம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம் இரண்டாம் தேதி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். தேரில் இருந்த சுவாமிகளை கோவிலுக்கு எடுத்து சென்ற பின், ஒருவாரம் தேரில் அலங்காரம் அப்படியே இருந்தது. அதன்பின் அலங்கார பகுதிகளை கலைந்து எடுத்தனர். மரத்தால் ஆன தேருக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், கோவில் பணியாளர்கள், தேரை சுற்றியும், ஜிங் சீட்டால், பாதுகாப்பு கவசம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி செய்து வருகிறார்.

Advertisement