மேற்காசியாவில் பதற்றத்தை குறையுங்கள்: கத்தார், ஈரானிடம் ஜெய்சங்கர் கோரிக்கை
புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஈரான் நாட்டு அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசிய நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சு நடத்தி பதற்றத்தை குறைக்க அனைத்து தரப்பிடமும் கோரிக்கை வைத்தார்.
பாதிப்பு
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்., 28ல் போரை துவங்கியது. பதிலடியாக ஈரான் தன் அண்டை நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கச்சா எண்ணெய் நிலையங்களை தாக்கி வருகிறது.
மேலும், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இது பொருளாதார ரீதியாக அனைத்து நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்த சூழலில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.
இதில், இருதரப்பு உறவுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஈரான் நியாயமற்ற தாக்குதலில் ஈடுபடுவதாகவும், குடிநீர், எரிசக்தி கட்டமைப்புகளை சேதப்படுத்துவதாகவும் இரு நாடுகளும் கவலை தெரிவித்தன.
வலியுறுத்தல்
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி உடனும் அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி வினியோகத்துக்கு முக்கியமான கடல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
நமக்கு தெரிந்தது எல்லோருக்கும் ஒரு கால்போட்டு பேசுவதுதான். இதே காலை இஸ்ரேலுக்குப் போட்டு பேசமாட்டாரா?
எண்ணெய் விற்கும் பணம் வந்தால் அதை வைத்து ஆயுதம் வாங்குவார்கள்.. ரூபாயில் கொடுப்பதால் வேறு வழியில்லாமல் வியாபாரம் செய்கிறார்கள். சீன தூண்டுதலில் இந்தியாவை ஓரங்கட்ட முயல்வார்கள் என்றும் எதிர்பார்க்கலாம். தொழில்நுட்பம் வாங்க வடகொரியா மற்றும் சீனாவிடம் ஏராளமாக பணம் கொடுப்பது தெரிகிறது. அணுவாயுதம் செய்யும் திட்டமிருந்தால் உலகுக்கே அது பாதுகாப்பற்ற சூழலை கொண்டு வரும்.
1. உலக அமைதி நலன்களை கருதி ஆராய்ந்து பதத்தற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று ஈரானிடம் கோரிக்கை வைத்தது அவரின் முதிர்ச்சியைக் காட்டுகின்றது. சரியான வெளியுறவு அமைச்சரை பிரதமர் தேர்வுச் செய்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்கு பின் இதுநாள்வரை இந்திய அரசிடம் இன்னும் தெளிவான வெளியுறவுக் கொள்கைகளில்லை. அதன் மோசமான பின் விளைவுகளை அன்று இலங்கை பூர்வீக தமிழர்கள் சந்தித்து விட்டார்கள். அதை இன்று ஏற்றுக் கொண்டு அவர்களும் வாழ்கின்றார்கள். 2. இதுப் போன்று நாளைய தமிழக நலன்கள் கருதி மக்களும் வரும் தேர்தலில் ஒரு நல்ல தமிழரை முதல்வராக தேர்வுச் செய்வார்களென நம்புகின்றேன். இதுநாள் வரைக்கும் அவர் யாரென்று இன்னும் அடையாளம் காண முடியவில்லை
கத்தார் ஒரு கத்துக்குட்டி. ஈரான் ஒரு செல்லாக்காசு. இவர்களிடம் சொல்வதை விட, ட்ரம்பிடம் சொல்லலாம்.
உமக்குத் தெரிந்தது ஜெய் ஷங்கருக்குத் தெரியவில்லை. மோடி, ஷா வுக்கும் தெரியவில்லை.மேலும்
-
மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் சூளுரை
-
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட ஓட்டு சாவடிகளில் தன்னார்வலர்கள் நியமனம்
-
உழவர்கரை காங்., வேட்பாளர் டைமன் நகரில் இறுதி கட்ட பிரசாரம்
-
உளுந்துார்பேட்டையில் வேளாண் கல்லுாரி :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி
-
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., க்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்வு
-
கள்ளக்குறிச்சி தொகுதியை மீட்டெக்க வேண்டும்: தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்