தமிழக முதல்வருடன் பா.ஜ., ரகசிய உடன்பாடு: மம்தா குற்றச்சாட்டு
பெதுவாதஹாரி: ''தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்துடன் சேர்த்து, 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏப்., 23 மற்றும் ஏப்., 29 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், நாடியா மாவட்டத்தில், நேற்று திரிணமுல் காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, தமிழகத்தில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுடன், பா.ஜ., ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.,வுக்கு ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேற்கு வங்கத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமித்துள்ளனர்.
அதற்கு பதிலாக, தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் பா.ஜ., நியமித்துள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்ததும் நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப் போகிறேன்.
லோக்சபா தேர்தலின் போது, வாக்காளர் பட்டியலை திருத்தாத பா.ஜ., சட்டசபை தேர்தலின்போது மட்டும் அதில் முறைகேடுகள் இருப்பதாக கூறி திருத்தி இருக்கிறது. அப்படி எனில், லோக்சபா தேர்தலில் தவறான வாக்காளர் பட்டியல் மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும்.
திறமையான அதிகாரி
மால்டாவில் தேர்தல் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், திரிணமுல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை கைது செய்த ஐ.பி.எஸ்., அதிகாரியை, தேர்தல் பார்வையாளராக தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். திறமையான அதிகாரிகளை இங்கே பணியாற்ற விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இது என்ன மம்தா ஸ்டாலின் மேலும் பாய்கிறார்? இருவரும் இண்டி கூட்டணிதானே? அப்போ இண்டி கூட்டணி அம்பேல்தானா?
இதற்கு வாய்ப்பு உள்ளது என்றே தெள்ள தெளிவாக தெரிகிறது
மேற்கு வங்கம், டெல்லி மற்றைய மாநிலங்களில் காட்டப் பட்ட கடுமை தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இல்லை? தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் பேச்சளவில்தானே உள்ளது? மத்திய அரசு பெரிதாக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்து விடவில்லையே?
சாரதா சிட் பன்ட் கொள்ளையடித்த பணத்தை எங்கே பதுக்கி வைத்து இருக்கிறாய்
Yes we also had that doubt as there is no action were taken in spite given many evidences by Annamalai ji...and now he has been sidelined from active politics
தமிழக திஜகவினரிடமும் பங்காளிகளிடமும் முதல்வருக்கு புறவாசல் உடன்பாடு உண்டு. டெல்லி திஜகவினரிடமும் கூட வர்த்தக உறவுடன் கூடிய உடன்பாடு உண்டு. பாஜக தலைமை நிதானமாக தன்போக்கில் [நன்றி ஸ்டாண்லி ராஜன்] செயல்படுவதால் தமிழக தேர்தலுக்குப்பின் நிரந்தரமாக பலர் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
எப்படி? ஒரு காலில் அடிபட்டு , கட்டுப் போட்டு மறு காலில் அடிபட்டது போல் காண்பித்த நாடகம் மாதிரியா? சுடாலின் ஐயா உங்க இண்டி கூட்டணியில் இல்லையா? என்ன ஆச்சு திடீர் அந்தர் பல்டி.? இங்கே சுடாலின் ஐயா பாஜகசை எதிரி என்கிறார்.நீங்கள் சொல்வது சரி என்றால்..மக்கள் இரு கட்சிகளையும் தண்டிப்பார்களா?
பிதற்றுவதில் மம்தாவை யாரும் அடிச்சுக்க முடியாது.
தமிழ் முதல்வருடன் உடன்பாடு என்ற ஒரு பொய்யை சொல்லி நல்ல பெயர் எடுக்க முயலுவது உங்களுக்கே அது கெடுதலில்போய் முடியும் நீங்க தேர்தலுக்கு பிறகு ஊர் ஊர் சென்றவர திட்டம் இருந்தால் தேர்தலுக்கு முன்பே முடித்து விடு தேர்தலுக்கு பிறகு உனக்கு எங்குமே மக்கள் வர மாட்டார்கள்மேலும்
-
உளுந்துார்பேட்டையில் வேளாண் கல்லுாரி :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி
-
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., க்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்வு
-
கள்ளக்குறிச்சி தொகுதியை மீட்டெக்க வேண்டும்: தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
-
ரிஷிவந்தியத்தில் அரசு பொறியியல் கல்லுாரி: வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி
-
பழனிசாமி முதல்வராவது உறுதி: சொரத்துார் ராஜேந்திரன் நம்பிக்கை
-
வி.சி., கட்சி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு