சமூக முன்னேற்றத்தின் ஒளிவிளக்கு 'தினமலர்'
ஆரம்ப காலத்தில், தமிழர் எழுச்சி குரலாக தொடங்கி, ரயில் பாதை, குடிநீர், கல்வி, ஹரிஜன் முன்னேற்றம் உள்ளிட்டவற்றில் அளப்பரிய பங்காற்றியது 'தினமலர்' நாளிதழ். இன்று, தமிழகத்தின் அதிக வாசகர்களைக் கொண்ட, முன்னணி நாளிதழாக மதிப்பிடப்படுகிறது.
நாளிதழ்கள் ஜனநாயக சமூகத்திற்கு அத்தியாவசியமானவை. மக்கள் மற்றும் ஆட்சி அமைப்புகளுக்கு இடையே, ஒரு முக்கிய பாலமாக செயல்படுகிறன. அவை, தகவல்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும், பெரும் பங்காற்றுகின்றன. அதிலும், எந்தவித சார்பும் இல்லாமல், நிகழ்வுகளை உண்மையுடன் வெளிப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை பெற்ற, முதன்மை நாளிதழ் தினமலர்.
அரசாங்கம் மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து, தவறு செய்வோரும் ஊழல் செய்வோரும், உயர் பதவிகளில் இருந்தால் கூட, செய்திகள் வெளியிட தயங்குவதில்லை. இதனால், சமூகத்தில் நீதி நிலைநிறுத்தப்படுகிறது. தினமலரை 'மக்களின் காவலர்' என்றாலும் மிகையாகாது.
அது மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை, தினமலர் செவ்வனே செய்து வருகிறது. சமூகத்தின் குரலாகவும், அறிவின் வழிகாட்டியாகவும், தலைமுறைகளை தெளிவான சிந்தனையுடன் முன்னேற்றம் நோக்கி வழிநடத்தும் தினமலரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
75 ஆண்டு என்பது, ஒரு எண்ணிக்கை மைல்கல் மட்டுமல்ல; அது நம்பிக்கை, நெறி, நேர்மை மற்றும் சேவையின் பெரும் வரலாறு. சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கழும் தினமலர், கோடிக்கணக்கான வாசகர்களின் இதய துடிப்பாகவே உள்ளது.
மக்களின் நம்பிக்கையை என்றும் தக்கவைத்துக் கொண்டு, சமூக முன்னேற்றத்துக்கு, தொடர்ந்து ஒளியாய் விளங்க வாழ்த்துக்கள்.
ஜே.ராபர்ட்
மாநில பொதுச்செயலர், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
***
மேலும்
-
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர்... 91 லட்சம்!: இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள்
-
சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
-
நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மஹாராஷ்டிராவில் அறிமுகம்
-
விமான எரிபொருள் விலை உயர்வால் எகிறியது 'ஏர் இந்தியா' டிக்கெட் கட்டணம்
-
பல மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய மகளிர் கழிப்பறைகள் இல்லை