சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 33 ஆண்டு சிறை
விழுப்புரம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற குமரேசன், 28; இவர், பிளஸ் 2 படித்து கொண்டிருந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம்சாட்டப்பட்ட குமரேசனுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும்
-
காங்., தேவதாசை ஆதரித்து வைத்திலிங்கம் பிரசாரம்
-
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட வாகன பிரசாரம்
-
தட்டாஞ்சாவடி மக்கள் மீது ரங்கசாமிக்கு நம்பிக்கை இல்லாமல் மங்கலத்தில் போட்டி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சாடல்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் சுல்தான்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
-
வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்
-
சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு