என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் சுல்தான்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார், நேற்று காலை சுல்தான்பேட்டையில் வீடு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில், என்.ஆர்.காங்., வேட்பாளராக ரவிக்குமார் போட்டியிடுகிறார். நேற்று காலை சுல்தான்பேட்டை பகுதியில் அ.தி.மு.க., - அ.ம.மு.க., - ல.ஜ.க., மற்றும் கூட்டணி கட்சியினருடன் 'ஜக்கு' சின்னத்துக்கு வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாலையில் என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். வில்லியனுார், மாதாகோவில், உத்திரவாகினிப்பேட், ஒதியம்பட்டு, வி.மணவெளி, சுல்தான்பேட்டை, எம்.னி.ஆர்., சிலை வழியாக மாட வீதிகளில் வளம் வந்து திருக்காமீஸ்வரர் கோவில் எதிரே பிரசாரத்தை முடித்தார்.

Advertisement