தட்டாஞ்சாவடி மக்கள் மீது ரங்கசாமிக்கு நம்பிக்கை இல்லாமல் மங்கலத்தில் போட்டி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சாடல்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் தொகுதி முழுதும் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து பேசியதாவது:
புதுச்சேரியில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க காங்., ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவ தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.
ரங்சாமிக்கு தட்டாஞ்சாவடி மக்கள் தான் இந்த வாழ்க்கை கொடுத்தனர். ஆனால் உங்களை மறந்துவிட்டார். அதன் காரணமாக நீங்களும் தேர்தலில் மறந்து விடுவீர்களோ என்ற அச்சத்தில் உங்கள் மீது நம்பிக்கையின்மையில்லாமல் மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.உங்களை மறந்தவரை நீங்களும் மறப்பது தான் நல்லது. நான் என்றும் மறக்காமல் உங்களின் எதிர்காலத்திற்காக படுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
91 அரசு பள்ளிகளில் 235 பேர் சேர்க்கை
-
மின் கசிவால் வீட்டு ஏ.சி.,யில் தீ விபத்து
-
இரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்
-
வி.இ.டி., கலை அறிவியல் இருபாலர் கல்லுாரியில் சாதனையாளர் தினம்
-
மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
நாளை முதல் 'பூத் சிலிப்' வீடு வீடாக வழங்க ஏற்பாடு