காங்., தேவதாசை ஆதரித்து வைத்திலிங்கம் பிரசாரம்
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி காங்., வேட்பாளர் தேவதாஸ் ஆதரித்து காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் திறந்த வேனில் தொகுதி முழுதும் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
காமராஜ் நகர் தொகுதியில் காங்., சார்பில், தேவதாஸ் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுதும் சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவரை ஆதரித்து, காங்., தலைவர் வைத்திலிங்கம் நேற்று திறந்த வேனில் தொகுதி முழுதும் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
லெனின் நகர் பகுதியில் துவங்கிய பிரசார ஊர்வலம், காமராஜ் நகர் தொகுதியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஞானபிரகாசம் நகர் அருகில் நிறைவடைந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்., நிர்வாகிகள், இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
Advertisement
Advertisement