குடும்பத்தை காட்டிலும் திருமங்கலம் தொகுதி மக்களை அதிகம் நேசிப்பவர் என் தந்தை: வேட்பாளர் உதயகுமார் மகள் உருக்கம்
மதுரை: திருமங்கலம் அ.தி.மு.க., வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் கல்லுப்பட்டி ஒன்றியம் சத்திரப்பட்டி, தம்பிபட்டி, வன்னிவேலன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அவருடன் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் செயலாளரும், உதயகுமார் மகளுமான பிரியதர்ஷினி முரளி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பாவாடியான், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், வக்கீல் பாஸ்கரன், பேரையூர் ராமகிருஷ்ணன், மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பிரியதர்ஷினி முரளி பேசியதாவது: 24 மணி நேரமும் திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தை உழைத்து வருகிறார். குடும்பத்தை காட்டிலும் இத்தொகுதி மக்களைதான் அதிகம் நேசிக்கிறார். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் சுயநலத்துடன் உழைத்தது இல்லை. கொரோனா காலங்களில் மக்களுக்கு அரிசி, காய்கறி உட்பட பல்வேறு தொகுப்புகளை வழங்கினார். அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கினார். திருமங்கலம் தொகுதிக்கு காவல்காரனாக இருப்பார் என்றார்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: கல்வி, மக்கள் பணி, சேவை, நாணயத்தில் நான் தான் உங்கள் மனதில் முதலிடத்தில் இருப்பேன். பெரும்பிடுகு முத்திரையருக்கு தபால் தலை வெளியிட்டு அவருக்கு புகழ் சேர்த்தது தே.ஜ., கூட்டணி அரசு. கொரோனா காலங்களில் உங்களுடன் இருந்தேன். 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஏழு ஊர் திருவிழா கொரோனாவால் தடைபடக்கூடாது என்று அமைச்சராக இருந்தபோது உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி நடத்தி காட்டினேன் என்றார்.
மேலும்
-
தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி
-
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்
-
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சி
-
மகளிருக்கு மீண்டும் தாலிக்கு தங்கம் :அ.தி.மு.க., வேட்பாளர் அரி வாக்குறுதி