திருப்பரங்குன்றம் தி.மு.க., தொகுதியாக மாறும்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி பிரசாரம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி., நகர், நெல்லையப்புரம் பகுதியிலும், மாலையில் கூத்தியார்குண்டு, ஆலங்குளம், வலையப்பட்டி பகுதிகளிலும் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.8 ஆயிரம் கூப்பன் மூலம் நீங்கள் விரும்பும் மின்சாதன பொருட்களை வாங்கலாம். முதல்வர் சொல்வதைதான் செய்வார். செய்வதைதான் சொல்வார்.
திருப்பரங்குன்றத்தில் உதயசூரியன் உதயமானதும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். இத்தொகுதி தி.மு.க., தொகுதியாக மாறும். இப்பகுதி நுாலகம் புதுப்பிக்கப்படும். நிழற்குடை அமைக்கப்படும். மார்க்கெட் வசதி செய்து தரப்படும். பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்கப்படும். திருப்பரங்குன்றத்தில் மின்மயானம் அமைக்கப்படும். கிருதுமால் நதி கால்வாய் சீரமைக்கப்படும் என்றார்.
தி.மு.க., பகுதி செயலாளர் உசிலை சிவா, வட்ட செயலாளர் பரமேஷ்பாபு, இளங்குமரன், ஐ.டி., அணி துணை அமைப்பாளர் தினேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாரியப்பன், இளைஞரணி பகுதி அமைப்பாளர் சாரதி, மகளிரணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதற்கிடையே முன்னாள் ஊராட்சி தலைவர் ராசு தலைமையில் 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் கிருத்திகா தங்கப்பாண்டி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அவனியாபுரம் பகுதி செயலாளர் ஈஸ்வரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தனபால், வக்கீல் ஆஸ்டின், அரசு சிறப்பு வக்கீல் சாஜி பினோ கலந்து கொண்டனர்.
மேலும்
-
தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி
-
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்
-
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சி
-
மகளிருக்கு மீண்டும் தாலிக்கு தங்கம் :அ.தி.மு.க., வேட்பாளர் அரி வாக்குறுதி