கரூர் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தில்லையேந்தல், மோர்க்குளம், வைகை, சின்ன பாளையரேந்தல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக கரூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு அடி விட்டத்தில் ஆறடி ஆழத்தில் நீண்ட வெள்ளை நிற பைப்புகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட பெருவாரியான கிராமப் பகுதிகளில் கரூர் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக 60 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

விரைவில் கரூர் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும் போது குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

---

Advertisement