ரூ.3.47 லட்சம் மதிப்பில் மது பறிமுதல்

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில், 3.47 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் மூலம் இதுவரை, 1.59 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 1.47 கோடி ரூபாய் ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 3.47 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுபானங்கள், 28.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், 52 லட்சம் மதிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5.44 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவசமாக கொடுப்பதற்காக வைத்திருந்தது பொருட்களை கைப்பற்றி உள்ளோம்.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், வாக்காளர்கள் கொண்டு வரும் மொபைல் போனை பெற்று வைத்திருந்து, ஓட்டுப்பதிவுக்கு பின் ஒப்படைக்கப்படும். தேர்தல் புகார், நடத்தை விதிமீறல் புகார் மாவட்டத்தில் இதுவரை, 1,404 புகார் வந்து, 1,403 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். கட்சிகள், வேட்பாளர்கள் பிரச்சாரம் உட்பட பிற அனுமதிகள் பெற, 'சுவிதா' ஆப் மூலம் இதுவரை, 790 விண்ணப்பம் வந்தது. 688 விண்ணப்பத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement