பி.யு., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்

பெங்களூரு: இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பி.யு., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

பி.யு., இரண்டாம் ஆண்டிற்கு கடந்த மாதம் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியிருந்தார்.

ஏப்ரல் மாதம் துவங்கி நேற்றுடன் ஆறு நாட்கள் ஆனாலும், தேர்வு முடிவுகள் குறித்து எந்த தகவலும் வரவில்லை.

இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. அதனால், தேர்வு எழுதிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.

ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என்றும், இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும், கர்நாடக பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீடு வாரியம் தலைவர் பிரகாஷ் நிட்டள்ளி நேற்று மாலை ஊடகத்தினரிடம் கூறினார்.

தேர்வு முடிவுகளில் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Advertisement