ரூ.2.57 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம் காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,671 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 153.90 ரூபாய், குறைந்தபட்சம், 145.66 ரூபாய்க்கும் ஏலம் போனது.


மொத்தம், 2.56 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,751 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 37-44 ரூபாய்க்கு விற்றது. 69 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 130-152 ரூபாய்; ஏழு மூட்டை எள் வரத்தாகி கிலோ 122 ரூபாய்க்கும் விற்றது.

Advertisement