மின் வாகனங்கள் விற்பனை 25 லட்சத்தை நெருங்கியது
புதுடில்லி: நாட்டில் மின்சார வாகனங்களின் சில்லரை விற்பனை கடந்த நிதியாண்டில் 24.60 சதவீதம் அதிகரித்து 24.52 லட்சமாக இருந்தது என, வாகன முகவர்கள் கூட்டமைப்பான 'படா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன பிரிவுகளும் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக, மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22 சதவீதம் உயர்ந்து 14 லட்சத்தை கடந்துள்ளது. மின்சார பயணியர் கார் விற்பனை 2 லட்சத்துக்கு சற்றே குறைவாக பதிவாகியுள்ளது. எனினும், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 84 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பயணியர் கார் பிரிவில், 'டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ்' நிறுவனமும்; இருசக்கர வாகனங்களின் பிரிவில் 'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனமும் முதலிடம் பிடித்துள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சித்தராமையா மீண்டும் முதல்வராவார் அமைச்சர் ஜமீர் அகமது பேச்சால் சர்ச்சை
-
சோழிங்கநல்லுாரில் மாற்றத்தை கொண்டுவர அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க கந்தன் பிரசாரம்
-
சீக்ரெட் சிங்காரம்
-
பி.எஸ்.என்.எல்., புதிய தலைமை அதிகாரியாக திலகவதி பொறுப்பேற்பு
-
ஒடிஷா தொழிலாளி கொலையில் நண்பர் கைது
-
தொழில் போட்டியில் தாக்குதல் மூன்று பேர் சிக்கினர்
Advertisement
Advertisement