திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாளை (ஏப்ரல் 08) விஜய் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நாளை (ஏப்.8) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மூத்த தலைவர் செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார். விஜய், தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து வாகனத்தில் திருநெல்வேலி கேடிசி நகர் நோக்கி வருகிறார். கேடிசி நகர் காப்பர் லீப் ஹோட்டல் அருகே தனியார் இடத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: திருநெல்வேலியில் ஒரே இடத்தில் மட்டுமே விஜய் பேசுகிறார். அவர் ரோடு ஷோவாக திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள் வழியாகச் சென்று பின்னர் தூத்துக்குடி செல்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் 51 விதிமுறைகள் விதித்துள்ளனர்.
இதில் குடிநீர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மற்ற கட்சிகளை விட தவெக கூட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சென்னை தவிர பிற இடங்களில் விதிமுறைகளை பின்பற்ற சிரமம் இல்லை.
ஆனால் சென்னையில் மட்டுமே தடைகள் அதிகம் உள்ளன. மேலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீட் கிடைக்கும் என நம்பி பணியாற்றியவர்களுக்கு சீட் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. இதற்கு, “யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கே சீட் வழங்கப்படும் என்பது தலைவரின் முடிவு. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து (8)
Sun - ,
07 ஏப்,2026 - 13:39 Report Abuse
தப்பு, தப்பு கன்னத்துல போட்டுக்குங்க குழந்தைகள் விசில் டாக்டர், டாக்டர்.செங்கோட்டையன் தெரிவித்தார்னு நியூஸ் போடுங்க. 0
0
Reply
SJRR - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:28 Report Abuse
இவர் சாலை மார்க்கமாக வந்தாலே இவரை சூழ்ந்து ரசிகர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சர்க்கஸ் வித்தை எல்லாம் காண்பிக்கிறார்கள். இதற்கு இவர் ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்ட இடத்திற்கு வரலாம். 0
0
Reply
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,இந்தியா
07 ஏப்,2026 - 13:09 Report Abuse
தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு டிஜிபியும் மாவட்ட காவல்துறை கண்பாணிப்பாளர்களும் விசையை பற்றியும் தவேக தற்குறிகளைப்பற்றியும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்களே.. 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 13:06 Report Abuse
விஜய்க்கு மட்டுமே இம்புட்டு கட்டுப்பாடு.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். 0
0
Reply
PALANISWAMY - COIMBATORE,இந்தியா
07 ஏப்,2026 - 11:41 Report Abuse
உங்கள் கட்சி ரசிகர்கள் தொண்டர்கள் போல மரத்தில் ஏறுவது, கரண்ட் கம்பத்தில் ஏறுவது, வாகனத்தில் சர்க்கஸ் செய்வது, கார் முகப்பில் ஏறி கண்ணாடிக்கு முத்தம் தருவது போன்ற செய்கைகளை மற்ற எந்த கட்சி தொண்டர்களும் செய்வதில்லை. மேலும் தேர்தல் சமயத்தில் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல்துறை என்ன செய்ய முடியும். முதலில் உங்களையும் உங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தொண்டர்களை ஒழுங்குபடுத்துங்கள். உங்கள் கட்சி ஆளுகளையே உங்களால் சரி செய்ய இயலவில்லை நீங்கள் நாட்டை ஒழுங்கு படுத்தப்போகிறீர்களா ? 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
07 ஏப்,2026 - 11:35 Report Abuse
சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தும் கோடைக்காலம் வேற... இந்தாளு கூட்டம்னாவே கரூர் சம்பவம்தான் நினைவுக்கு வருது... இதே திருநெல்வேலியில்... மறைந்த மாபெரும் தலைவர்கள் கலைஞர், ஜெயலலிதா, ராகுல், மோடி போன்ற மாபெரும் தலைவர்களும் தற்போது... ஸ்டாலினும் கூட்டம் நடத்தியிருக்கார்... எடப்பாடியும் கூட்டம் நடத்தியிருக்கார்... அந்த கூட்டம் நடக்கும்போதெல்லாம் எதுவும் நடப்பதில்லை... ஏன் எனில்.... அவங்க கட்டுபாட்டை காக்கின்ற தலைவர்கள்... அவங்க தொண்டர்கள் சுயகட்டுப்பாடு மிக்கவர்கள்... அந்த தலைவர்கள் திரும்பி பார்த்தாலே பயப்படும் தொண்டர்கள்... இவனுங்க காட்டுப்பசங்க... “தம்பி கீழே இறங்குப்பா... கீழே இறங்குப்பா”...ன்னு கெஞ்சுனாலும்.. கட்டுபாடு இல்லாத காட்டுமிராண்டிகள் கூட்டம்... அதுனாலதான் சொல்றேன்... 0
0
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
07 ஏப்,2026 - 12:34Report Abuse
மறைந்த மாபெரும் தலைவர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் அகில இந்திய தலைவர்களான ராகுல், பிரதமர் மோடி போன்ற மாபெரும் தலைவர்களும் தற்போது... ஸ்டாலினும் கூட்டம் நடத்தியிருக்கார்கள் 0
0
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
07 ஏப்,2026 - 15:15Report Abuse
ஸ்டாலின் எடப்பாடி எல்லாம் காசு கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள் . காசு கொடுக்கலேன்னா ஒரு பய வரமாட்டான். கட்டுபாடாவது வெங்காயமாவது பயப்படுவதாவது. ஸ்டாலின் சொன்ன வேட்பாளர் காந்தி மகன் சீட்டு கொடுத்தார். ஆனால் காந்திதான் நிற்கிறார். ஸ்டாலினுக்கு யாரும் பயப்படவில்லை. ஆனால் விஜய்க்கு தானா கூட்டம் கூடுகிறது அதுதான் வித்தியாசம். ஏகப்பட்ட நிபந்தனைகள். விஜயை பிரச்சாரம் பண்ணவே விடமாட்டேங்கிறாங்க. எல்லாம் ரெண்டு திராவிட கட்சிகளும் ஒன்னு சேர்ந்து விஜயை ஒழிக்கப்பார்கிறார்கள். அது நடக்காது . 0
0
Reply
மேலும்
-
தேர்தல் அதிகாரிகள் சோதனை; ரூ. 1.40 லட்சம் பறிமுதல்
-
திருப்பரங்குன்றம் தி.மு.க., தொகுதியாக மாறும்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி பிரசாரம்
-
குடும்பத்தை காட்டிலும் திருமங்கலம் தொகுதி மக்களை அதிகம் நேசிப்பவர் என் தந்தை: வேட்பாளர் உதயகுமார் மகள் உருக்கம்
-
பொங்கல் உற்ஸவம்
-
காராங்காடு சர்ச்சில் பாஸ்கு விழா
-
கரூர் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்
Advertisement
Advertisement