தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழகம் தான் டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பாஜ எம்எல்ஏவைத் தேர்ந்தெடுத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மஹாராஷ்டிர முதல்வரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழக அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழகம் தான் டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வாசகர் கருத்து (66)
Venugopal, S - ,
07 ஏப்,2026 - 23:12 Report Abuse
எவனோ தப்புத் தப்பா எழுதி குடுத்து இருக்கலாம். பதினைந்து லட்சம் கோடி கடன். அது எத்தனை டிஜிட்? 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
07 ஏப்,2026 - 18:22 Report Abuse
கள்ளக்குறிச்சி கூட டபுள் டிஜிட் தான், சார் கேஸ் டபுள் டிக்கட் டாஸ்மாக் பாட்டில் ஊழல் டபுள் டிஜிட் 0
0
Reply
GMM - KA,இந்தியா
07 ஏப்,2026 - 18:20 Report Abuse
தமிழகம் என்ற ஊழல் மலிந்த துருப்பிடித்த கூட்ஸ் வண்டியை தள்ள மத்திய அரசு என்ற என்ஜின் முன்னும் மாநில நிர்வாகம் என்ற என்ஜின் பின்னும் ஊர் போய் சேர தேவை. மத்திய அரசு உதவி இல்லாமல் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் தள்ள முடியாது என்று தானே ஸ்டாலின் கூற வருகிறார்? 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
07 ஏப்,2026 - 17:51 Report Abuse
டபுள் டிஜிட் வளர்ச்சி பாராட்ட வேண்டிய விஷயம் தான். அப்ப அஞ்சு லட்சம் கோடி கடன் ஏன் வாங்குனீங்க. அதை தெளிவு படுத்துங்க 0
0
Reply
Raj - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 17:33 Report Abuse
எப்படியய்யா உமக்கு மட்டும் சிரிக்காமல் காமெடி பண்ண முடியுது. 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
07 ஏப்,2026 - 17:14 Report Abuse
தமிழகம் தான் ஊழலில் டபுள் டிஜிட் வளர்ச்சி என்று அர்த்தம் கொள்ளவும் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 16:57 Report Abuse
இன்று ஊடகக்கங்க்களில் வந்த செய்தி குறித்து உங்க அறிக்கையா? 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
07 ஏப்,2026 - 16:33 Report Abuse
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 0
0
Reply
Loganathan Balakrishnan - Salem,இந்தியா
07 ஏப்,2026 - 16:14 Report Abuse
அந்த வளர்ச்சிக்கு உங்களோட ஆட்சி கண்டிப்பா காரணம் இல்லை 0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
07 ஏப்,2026 - 14:59 Report Abuse
கடன் வாங்கி வளர்ச்சி வளர்ச்சினா எப்படி. வளர்ச்சியோடு கடன் சுமையையும் மக்கள் தலையில்தான் தூக்கி வைக்கிறீர்கள். அவர்களது வரிப்பணத்தில்தான் கடனை அடைக்க வேண்டும் என பாமர மக்களுக்கு புரியாத வரை உங்களுக்கு பாராட்டு கிடைக்கலாம். என்னிக்கு அரசு தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப் படுகிறதோ அன்னிக்குத்தான் மக்களுக்கு புரிய வரும். வாழ்க தமிழகம். 0
0
Reply
மேலும் 56 கருத்துக்கள்...
மேலும்
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
Advertisement
Advertisement