விழிப்புணர்வு ஊர்வலம்

போத்தனூர்: மலுமிச்சம்பட்டி பஞ்., சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் மலுமிச்சம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் துவங்கி, பஞ்., அலுவலகம் வரை நடந்தது.

மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி தலைமையில் நடந்த ஊர்வலத்தில், நேரு மகா வித்யாலயா கல்லூரி மாணவர்கள் 125 பேர், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் கார்த்திக், யோகநாதன், கல்லூரி தேர்தல் அலுவலர் நந்தகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் முருகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement