பொன்னேரியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு

பொன்னேரி:பொன்னேரி சட்டசபை தொகுதியில், 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 15மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பொன்னேரி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., - காங்., - த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில், 18 பேரும், சுயேட்சைகள், 9 பேரும் என, மொத்தம், 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஏப்., 6ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்நிலையில், பொன்னேரி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், முன்னிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தன.

இதில், அ.தி.மு.க., - காங்., - த.வெ.க., - நா.த.க., சுயேட்சைகள் என, 15 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கட்சிகளின் அங்கீகார கடிதம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இல்லாத, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கால அவசகாசம் நாளை வரை உள்ளதால், இறுதி வேட்பாளர் பட்டியல் பின்னர் தெரியும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement