த.வெ.க., அ.தி.மு.க., தாராளம்: அடக்கி வாசிக்கும் தி.மு.க.,

கம்பம்:வேட்பு மனு தாக்கல் நாளில் அ.தி.மு.க., 'தாராளம்' காட்டியும், தி.மு.க., கைகளை சுருக்கி கொண்டது.

கம்பம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஏற்கெனவே 5 முறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர். சிட்டிங் எம்.எல்.ஏ.,. அ.தி.மு.க. வேட்பாளர் ஜக்கையன் எம்.பி., எம். எல்.ஏ., பதவி வகித்தவர். த.வெ.க., வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். நா.த.க. , அன்பு செல்வி மட்டும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே 3 வேட்பாளர்களும் தேர்தலில் நன்றாக செலவழிப்பார்கள் என கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் அ.தி.மு.க. , சார்பில் தாராளம் காட்டியதால் நிர்வாகிகள் உற்சாக மூடில் இருந்தனர். த.வெ.க., வேட்பாளர் அறிவிப்பில் இருந்தே 'தாராளம்' காட்டுகின்றனர். ஆனால் ஆளும் தரப்போ வேட்பு மனு தாக்கலன்று கூட கைகளை 'சுருக்கி'யது கட்சி நிர்வாகிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement