தேர்தல்களம் பகுதிக்காக ரெட்டியார்சத்திரத்தில் தேர்தல் விதி அமலில் அலட்சியம்

ரெட்டியார்சத்திரம்:"ஆத்துார் தொகுதி தேர்தல் அறிவிப்பு வெளியாகி 22 நாட்களாகியும் நடத்தை விதி அமல்படுத்தலில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் நீடிக்கிறது.

மார்ச் 15ல் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிகள் உடனே அமல்படுத்த அரசு அலுவலகங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் படங்கள், அரசு திட்டங்களின் விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் போர்டுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. அனைத்து தொகுதிகளிலும் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆனால் செம்பட்டியில் உள்ள ஆத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைப்பதில் வருவாய்த்துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி இரவு 9:15க்கு சீல் வைத்தனர். 22 நாட்களானபோதும் தொகுதியில் விதிமீறல் நடவடிக்கை கண்காணிப்பில் பாரபட்சம் நிலவுவதாக அரசியல் கட்சியினர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சிய, பாரபட்ச நடவடிக்கை குறித்த ஆதாரங்களுடன் சில அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்புவதை தொடர்கின்றனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் நடத்தை விதிகள் கண்டுகொள்ளப்படவில்லை. மைலாப்பூர் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, கு.ஆவரம்பட்டி ரேஷன் கடை என, அரசு கட்டடங்கள், பொது இடங்களில் விதிமீறல்கள் தாராளமாக உள்ளன.

Advertisement