மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான கட்டடத்தை பராமரிக்க மாட்டீங்களா:ரூ. பல கோடியில் உருவானது வீணாகலாமா
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான இடத்தில் பாழடைந்து கிடக்கும் ரூ.பல கோடி மதிப்பிலான மத்திய இளையோர் விடுதி வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிட்னஸ் ஜிம், இன்டோர் பாட்மின்டன் அரங்கு, செயற்கை தடகள டிராக், ஹாக்கி, இயற்கை கால்பந்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பள்ளி கோடை விடுமுறையின் போது மாணவர்களுக்கு 21 நாட்கள் காலை, மாலையில் தடகளம், வாலிபால், கூடைபந்து, கால்பந்து விளையாட்டுகளில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிறைவுபெறாத மினி ஸ்டேடியம் இங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்கள் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். மதுரையில் ரேஸ்கோர்ஸ் (வடக்கு தொகுதி) நீங்கலாக 9 தொகுதிகளில் தலா ரூ.3 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவித்து மூன்றாண்டுகளாகியும் சோழவந்தான் தொகுதியில் மட்டும் பெயருக்கு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதியில் சக்கிமங்கலத்தில் அலுவலக கட்டடம் கட்டப்படுகிறது. மற்ற தொகுதிகளில் இடம் தேர்வுகூட இன்னும் முடியவில்லை. இதனால் இடவசதியில்லாத கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் இலவச பயிற்சிக்காக ரேஸ்கோர்ஸ் வருகின்றனர். தினமும் காலை 6:00 முதல் 8:00 மணி வரை, மாலை 4:00 முதல் 6:00 மணிவரை பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் வீடு சென்று மீண்டும் மைதானம் வரமுடியவில்லை. இது ஆண்டுதோறும் பிரச்னையாக உள்ளது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் முன்புறம் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டுள்ள 120 பேர் தங்கும் வசதியுடன் கூடிய இளையோர் விடுதி, பராமரிப்பின்றி 4 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது. இதை மராமத்து செய்வதற்கு மத்திய அரசு நிதிதரவில்லை. கட்டியுள்ள இடம் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு சொந்தமானது. எனவே அதை கையகப்படுத்தி மராமத்து செய்து மாணவர்களுக்கு தற்காலிக தங்கும் விடுதியாக மாற்ற வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யாருக்கும் பயன்படாத கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலப் போட்டிகள் நடக்கும் போது மாணவர்களை இங்கு தங்க வைக்கலாம். அதன் மூலம் மாணவர்களுக்கு ஆகும் ரூ. பல கோடி ஓட்டல் செலவை சேமிக்கலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்
-
சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு 91.23 சதவீதம் புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை
-
வாக்காளர்களின் மொபைல் போனை பத்திரமா திருப்பி கொடுத்த தேர்தல்துறை
-
காரைக்கால் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
-
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
-
ஊசுடு தொகுதியில் அதிகம் ஏனாமில் குறைந்த ஓட்டு பதிவு