விருப்ப மனு கட்டணத்தை திரும்ப கொடுக்கிறார் கமல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாததால், நிர்வாகிகளிடம் வாங்கிய விருப்ப மனு கட்டணத்தை மக்கள் நீதி மய்யம் திருப்பி கொடுக்க உள்ளது . நாளை முதல் ஏப்.,16 வரை கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் மக்கள் நீதி மய்யமும் விருப்ப மனுக்களை வழங்கியது. இதற்காக ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உரிய கட்டணத்தை செலுத்தினர். ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் கமல் ஜகா வாங்கிவிட்டார்.
இதனையடுத்து விண்ணப்ப கட்டணத்தை கட்சி நிர்வாகிகள் திரும்ப கேட்டனர்.
ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளோ, விருப்ப மனுக்கான கட்டணம் கட்சி நிதியாக கருதப்படும். கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது எனத் தெரிவித்தனர். இது சர்ச்சையை உண்டாக்கியதுடன் கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை ( ஏப்ரல் 08) முதல் ஏப்.,16க்குள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
நீங்கள் அரசியலில் இப்போது செய்யும் காமெடியை கல்யாணராமன், எல்லாம் இன்ப மயம், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், அவ்வை சண்முகி போன்ற நீங்கள் நடித்த காமெடித் திரைப் படங்களில் கூட நீங்கள் செய்ததில்லை ஆண்டவரே.
கம்லா ஹாஸ்யன் ஒரு புதிய வரலாறு படைக்கிறார். விருப்ப மனு என்பதே துட்டு பாக்கத்தானே. கம்லா ஹாஸ்யனுக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
முதலை வாயில் போன பணம் ..அதிசயமாக இருக்கு திரும்பி கொடுக்க சம்மதித்த டலீவர்
அட்மின் செலவை கழித்துக் கொண்டா...சூரியனுக்கே டார்ச் லைட் மூலம் வெளிச்சம் காட்டும் ஆண்டவரே?
பெரிய எஜமானிடம் க்ளைம் செய்திருப்பார்... இல்லை என்றால் கமலாவது திரும்ப கொடுப்பதாவது...
தலைமை நிலையச் செயலர் செந்தில்... அடேங்கப்பா.பெரிய விஷயம் தான்.ஏன் வங்கிக் கணக்கில் போட்டு விடலாமே.நேரில் தான் வர வேண்டுமா என்ன? எல்லாரும் கழுவி ஊற்றியதால் மன மாற்றமா? இருக்காது? வழக்குப் போடுவேன் என சொல்லியிருப்பார்கள்.இல்லாவிட்டால் எச்சைக் கையால் காக்கா ஓட்டாத நபர் இவர்....
பெரிய கம்பெனியில் கட்சியை அடகு வைத்து கணிசமாக தேத்தின தொகையில் இந்த 30 லட்சத்தை திருப்பித் தருவது சுண்டைக்காய் சமாச்சாரம். ராயப்பேட்டை பெனிபிட் பண்டு கதை ஆகாத வரைக்கும் சந்தோஷம்.
இங்கே வாங்கி அங்க கொடுத்தாச்சு போல. இப்போ அங்கே இருந்து திருட்டு திராவிட கூட்டம் இங்கே கொடுத்தாச்சு. இப்போ அமௌன்ட் செட்டில் .
உங்க கட்சிய தான் மவுண்ட் ரோடு திமுக ஆபீஸ்ல அடகு லச்சாச்சே... அங்கதானே போய் 50 ஆயிரம் வாங்கிக்கனும்?!
பிடித்தம் போக எவ்வுளவு சார் திரும்பி கொடுப்பீங்க?
பிடித்தம் போக ஊர் திரும்பறதுக்கு பணம் கொடுப்பார் போல
49,999 ருபாய்மேலும்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
-
'ஏசி' பெட்டியில் காப்பர் ஒயர் திருடிய சிறுவன் சிக்கினான்
-
எம்.கே.பி., நகர் வடக்கு நிழற்சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு 'நோட்டீஸ்'