நுாறு சதவீத ஓட்டுப்பதிவு :விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஆட்டோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், 'மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி ஊர்வலம் நடந்தது. இதில், 40-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து பிரதான சாலை வழியாக பழைய பஸ் நிலையம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது' என்றார்.

டி.ஆர்.ஓ., அரிதாஸ், மகளிர் திட்ட இணை இயக்குநர் செந்தில்வடிவு, ஆர்.டி.ஓ., சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement