முதியோர் பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்றுக்கு வசூல் : சிவகங்கையில் சங்கங்கள் மீது புகார்
சிவகங்கை:மாவட்டத்தில் முதியோர் பென்ஷன் பெறுவோரின் வாழ்வாதார சான்று புதுப்பிக்க, சங்கத்தில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் கீழ் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு முதியோர் பென்ஷன் (ஓ.ஏ.பி.,) தொகை மாதம் ரூ.1,200 வரை வழங்கப்படுகிறது. இந்த தொகை அந்தந்த முதியோர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து பென்ஷன் பெற, ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் வாழ்வுரிமை சான்று வழங்க வேண்டும். இதற்காக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு பென்ஷனர்கள் அலையவேண்டிய அவசியம் இல்லை. இ- சேவை மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் இதற்கான கட்டணத்தை செலுத்தி, கேமரா மூலம் முகத்தை ‛ரீட்' செய்வதன் மூலம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வாழ்வுரிமை சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
தற்போது தொழிலாளர் நலத்துறை மூலம் முதியோர் பென்ஷன் பெறுவோர் இ- சேவை மையம், கம்ப்யூட்டர் மையங்களில் தங்களது வாழ்வுரிமை சான்றினை ‛ஆன்லைன்' மூலம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு சமர்பித்தால் மட்டுமே போதுமானது. ஆனால், இம்மாவட்டத்தில் உள்ள சில கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், முதியோர் பென்ஷனுக்கான வாழ்வுரிமை சான்று பெற, சங்கங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சங்கங்கள் மூலம் செல்லும் ‛வாழ்வுரிமை சான்றினை' மட்டுமே தொழிலாளர் நலத்துறை ஏற்றுக்கொள்வதாக பொய்யான தகவலை, முதியோரிடம் தெரிவித்து ஒவ்வொருவரிடமும் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது போன்று முதியோரிடம் விதிகளை மீறி கட்டாய வசூலில் ஈடுபடும் சங்கங்களை ரத்து செய்ய தொழிலாளர் நலத்துறை அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். * ஆன்லைனில் ‛வாழ்வுரிமை சான்று': தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் முகத்தை ரீட் செய்தாலே, தானாகவே வாழ்வுரிமை சான்றாக எடுத்து கொள்ளும். இதற்காக சங்கத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. ஏப்ரலுக்குள் கட்டாயம் வாழ்வுரிமை சான்றினை சமர்பிக்க வேண்டும் என்றனர். ///
மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்