அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
எஸ்.புதுார்:சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அருகே வர்ணப்பட்டி விலக்கில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மினி லோடு வேன், இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஒன்றன்பின் ஒன்றாக 2 மினி லோடு வேன்கள், அரசு விரைவு பஸ், தனியார் ஆம்னி பஸ் சென்றுள்ளது. புழுதிபட்டி அருகே வர்ணப்பட்டி விலக்கில் முன்னால் சென்ற லோடு வேன் மீது மற்றொரு வேன் மோதியது. இதில் முன்னால் சென்ற வேன் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், அரசு பஸ்சின் பின்னால் மோதியது. இதில் ஆம்னி பஸ், லோடு வேன்களின் டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இரு பஸ்களில் வந்த பயணிகள் மாற்று பஸ்களில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தஞ்சையை கேட்கவில்லை; முருகானந்தம் வாக்குமூலம்
-
அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் பொம்மைகளாக வடிவமைத்து பிரசாரம்
-
இன்று இனிதாக ... (09.04.2026) திருவள்ளூர்
-
கும்மிடியில் ரூ.1.72 லட்சம் பறிமுதல்
-
துண்டறிக்கையால் துயரம்; 'கவனிப்பு' என 'கப்சா'
-
இருங்காட்டுக்கோட்டை மேம்பாலத்தால்... நெரிசல் தீரும்! 4 மணி நேரத்தில் பெங்களூரு பறக்கலாம்
Advertisement
Advertisement