அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் பொம்மைகளாக வடிவமைத்து பிரசாரம்
அ .தி.மு.க., தேர்தல் வாக்குறுதி களை, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பொம்மைகள், கட் - அவுட்டுகளாக வடிவமைத்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, நான்காவது முறையாக போட்டியிடுகிறார். பிரசாரத்தில் புதிய முயற்சியாக, அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை பொம்மைகளாகவும் கட் - அவுட்டுகளாகவும் செய்து, ஒரு லாரியில் வைத்து மக்கள் பார்க்கும்படி தொகுதியில் வலம்வரச் செய்துள்ளார்.
அதில், அனைவருக்கும் 'அம்மா' வீடு, பொங்கல் தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கம், கரும்பு, பானை; ஜல்லிக்கட்டு நடத்துவோருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி, வீரர் ஒருவர் காளையை அடக்குதல், கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் விலையில்லா மின்சாரம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்வு, கல்விக்கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்களுக்கான பொம்மைகள் மற்றும் கட் - அவுட்டுகள் இடம் பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் முழு உருவ பொம்மைகள், முருகன் பொம்மை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்துக்கள் அனைவரும் நாட்டின் நன்மைக்காகவும் வருங்கால சந்ததிகளுக்காகவும் கட்டாயமாக ஓட்டளிக்கவேண்டும்.
பொம்மை வடிவங்களை தவெக கூட்டம் மொத்த குத்தகை எடுத்துள்ளது.
நல்ல முயற்சி... பலன் தர வாழ்த்துக்கள்மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்