சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை: எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மதுரை சிறை நிர்வாகம் சார்பில் தண்டனை கைதிக்கான சீருடை வழங்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கடை திறந்ததாக கூறி போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் இறந்தனர். இதை கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ், போலீசார் செல்லதுரை, வெயிலுமுத்து ஆகியோர் 2020ல் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை கொரோனா தொற்றால் இறந்துவிட, மற்ற 9 பேர் மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
நேற்று 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காலையில் விசாரணை கைதிகளாக மதுரை சிறையில் இருந்து புறப்பட்டவர்கள், மாலையில் தண்டனை கைதிகளாக திரும்பினர்.பாதுகாப்பு காரணங்களுக்காக சில ஆண்டுகளாகவே சிறையில் தண்டனை 'பிளாக்'கில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், எஸ்.ஐ., ரகுகணேஷ் மட்டும் தனி 'செல்'லில் உள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள தனி 'செல்'லில் உள்ளனர். இவர்களில் யாரும் தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் அவர்களை சிறை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மரண தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 9 பேரும் மேல்முறையீடு செய்ய உள்ளனர். தண்டனை கைதிகள் என்பதால் இவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் வெள்ளை சீருடைக்கான துணி வழங்கப்பட்டது. அதை சிறையில் உள்ள டெய்லரிங் பிரிவில் கொடுத்து தைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
"குற்றம் செய்த போலீஸாருக்குத் தண்டனை உறுதி. ஆனால், தப்பே பண்ணாத அவர்களின் 9 குடும்பங்கள் இன்று சமூகப் புறக்கணிப்பால் அழிவது என்ன நியாயம்?
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அழுது கொண்டிருக்காமல், தனிமனித வாழ்வுரிமைச் சட்டத்தை Article 21 பயன்படுத்தி, கீழ் நீதிமன்றம் முதல் மேல் நீதிமன்றம் வரை மிகக் கடுமையான சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்.
தங்களைத் தூண்டிவிட்டு இன்று கைகழுவிவிட்ட அந்த உயர் அதிகாரிகளிடம் SP நஷ்டஈடு கேட்டுப் போராடினால் மட்டுமே அவர்களுக்குச் சின்ன நீதியாவது கிடைக்கும்."
ஏன் இருவரையும் இறக்கும்வரை அடித்திருக்கிறார்கள்? இதில் ஏதேனும் சதி இருந்ததா?
இவர்களை ஓடவிட்டு என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்
கொலைகளுக்கு தகுந்த தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். உடனே இதை நிறைவேற்ற வேண்டும்
தண்டனைக்கு இடைக்கால தடைகிடைத்தால் அது அபராதத்துக்கும் சேர்த்துத்தான்...மேலும் இந்த மாதிரி ஓட்டு மொத்த தூக்கு தண்டனை போலீஸ் மீதான பயத்தை தரைமட்டம் ஆக்கி விடும் வாய்ப்பு உள்ளதால் மேல் முறையீட்டில் ஒன்றிரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை, மற்றவர்களில் ஒருசிலருக்கு ஐந்து முதல் பத்தாண்டுகள் சிறை தண்டனை, ஒருசிலருக்கு விடுதலை என்ற தீர்ப்பு அமலாகும் என்றே தோன்றுகின்றது..மேலும் செத்தவன் சிறுபான்மை என்பதால் பெரும்பான்மைக்கு கொடும் தண்டனை என்பதான எண்ணம் விதைக்கப் படவும் வாய்ப்பு அதிகம்.. இந்த எண்ணம் பிறகு ஒவ்வொரு வழக்கிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு அதிகப் படும்..எனவே வழக்கு இழுத்தடிக்கப்பட்டு தீர்ப்புகளில் கணிசமான மாற்றங்கள் அடுத்தடுத்த மேல் முறையீடுகளில் வரும் வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது...
இரட்டை தூக்குத்தண்டனை பெற்ற குற்றவாளிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யவிருப்பதால் இப்படியெல்லாம் சிந்திக்க தோன்றுகிறதோ?
மரணதண்டனைக்கு பதில் ஒரு கை மற்றும் ஒரு காலை செயலிழக்க செய்து நடை பிணமாக இருக்க விட வேண்டும்.
இந்த நேரத்தில் சிதம்பரம் பத்மினி காவல நிலைய கற்பழிப்பு மற்றும் கொலைவழக்கை கையாண்ட விதம் கவனிக்கவேண்டும் அந்த பெண் அவர்கணவர் இருவரும் கொடும் சித்ரவதை செய்து கணவர் கொலை செய்யப்பட்டார் பின்னர் விசாரித்த அதே காவல்துறை காவலர்கள் மேல் சாதாரண வழக்கை பதிவு செய்தார்கள் அதனால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்று உச்சநீதிமன்ற ம் காரணமே சொன்னது மாநில அரசின் காவல்துறை குற்றம் என்றாலே அது தானாக மத்திய அரசுக்கு செல்லவேண்டும் அதே மத்திய அரசு குற்றம் என்றால் நீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கலாம் அன்றைய காலத்தில் மீடியா இல்லாததால் செய்திகள் மக்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தவில்லை காவலர்கள் 10 வருட சிறை தண்டனையோடு விடுதலையாகிவிட்டனர்
மேலும் முறையீடு செய்ய உள்ளனர். யார் யாரிடம் தெரிவித்த தகவல் ? பதிலாக இவன்களது குடும்பம் என்ன நினைக்கிறது மகன் மகள் போன்றோர் என்ன செய்கிறார்கள் இதற்கு முன் எத்தனை கொலை செய்தார்கள் போன்ற செய்திகளை சேகரிக்கலாம்
ஏற்கனவே வாசக நண்பர் ஒருவர் நினைவுறுத்தியதை போல் பொய் மருத்துவ சான்று வழங்கிய அரசு மருத்துவருக்கு சட்டப்படி தகுந்த தண்டனை விதித்து சிறையில் அடைக்க வேண்டும்.மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை