பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்  

சிவகங்கை:சிவகங்கை அருகே பனங்குடி பெரியநாயகி அம்பாள் கோயில் கும்பாபிேஷகம் ஏப்., 20 ல் நடைபெற உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. ஏப்., 15 அன்று காலை 7:15 மணி முதல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். ஏப்., 17 ல் முதல் கால யாக சாலை பூஜையும், அதனை தொடர்ந்து ஏப்., 19 ம் தேதி வரை இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.

ஏப்., 20 அன்று காலை 5:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, தீபஸ்தானம் நடைபெறும். அன்று காலை 9:20 மணி முதல் 10:27 மணிக்குள் புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் ராஜகோபுர, மூலஸ்தான கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். யாலை சாலை பூஜை நாட்களில் நாதஸ்வர இன்னிசை கச்சேரி, வேத மற்றும் திருமுறை பாராயணம் நடைபெறும். பனங்குடி மற்றும் நடராஜபுரம் திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ///

Advertisement