சாத்தான்குளம் சம்பவம் அருவருக்கத்தக்க குற்றம்; தமிழக காவல் துறைக்கே இது ஒரு களங்கம்
மதுரை: 'சாத்தான்குளம் வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசாரை போல, ஒரு சிலர் செய்யும் தவறு, தமிழக காவல் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதற்கு குறைந்தபட்ச தண்டனை அளிப்பது மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் செயலாகிவிடும்' என, துாக்கு தண்டனை தீர்ப்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு துாக்கு தண்டனை விதித்து, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
அரிதான வழக்கு
இதன் தீர்ப்பு நகல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றம் உணர்ச்சிவசத்தால் செய்யப்பட்டால், அதை மிதமான காரணமாக கருத முடியும். இவ்வழக்கை பொறுத்தவரை, ஜெயராஜ், போலீசாரை கோபத்தில் பேசினார் என்பதற்காக, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று பழிவாங்கும் நோக்கில் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.
இதை கேள்வி எழுப்ப சென்ற பென்னிக்ஸையும் தாக்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீசில் தடுத்து வைத்தது சட்டவிரோதம். போலீசார், தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும், ஆடைகளை களைந்து தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர். இது, மனித மாண்புக்கு முற்றிலும் முரணானது.
சம்பவத்தின் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் நிராயுதபாணிகளாக இருந்தனர். அவர்கள் வெளியே தப்பித்து ஓடிவிடாதபடி, கதவை பூட்டி, கையில் கயிற்றை கட்டி, தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கையில், இவ்வழக்கு அரிதிலும், அரிதான வழக்கு என்ற விதியின் கீழ் வருகிறது.
சட்டம் வழங்கிய அதிகாரத்தை, பழிவாங்கும் நோக்கில் போலீசார் தவறான பயன்படுத்தியுள்ளனர். கைதிகளை அடிக்க, போலீசாருக்கு உரிமை இல்லை. தந்தை, மகனை இரவு முழுதும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இது, அருவருக்கத்தக்க குற்றம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர், ஒரே நேரத்தில் இறந்துள்ளனர். ஒரு குடும்பத்தின் ஆணிவேர் அகற்றப்பட்டுள்ளது. இருவரும் சாதாரண குடிமக்கள். சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்கள். இருவருக்கும் குற்றப் பின்னணி இல்லை.
குரூர மனநிலை
பிரேத பரிசோதனை வீடியோ மற்றும் போட்டோக்களை பார்க்கும் போது, மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டது தெரிய வருகிறது. இதை பார்ப்பவர்களின் மனம் வெம்பிவிடுகிறது.
குற்றவாளிகளான, 9 போலீஸ்காரர்களும் படித்தவர்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றம் செய்துள்ளனர். ஜெயராஜ் மனைவி செல்வராணியின் துக்கத்தை எவ்வகையிலும் நீக்க முடியாது.
தமிழக காவல்துறை திறமையான, நேர்மையான கடமைமிக்க அதிகாரிகளை கொண்டது. 'ஸ்காட்லாந்து யார்டு'க்கு இணையாக புகழ்பெற்றது. இவ்வழக்கின் எதிரிகளை போல், ஒரு சிலர் செய்யும் தவறு, தமிழக காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இத்தகைய குற்றங்களை புரிபவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், மற்ற போலீஸ்காரர்களிடையே, 'நீதிமன்றத்தால் நம்மை என்ன செய்துவிட முடியும். ஆயுள் தண்டனை தானே வழங்குவார்கள்.
இறந்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்து தப்பித்து விடலாம் அல்லது சாட்சியங்களை அழித்து தப்பித்துவிடலாம். 14 ஆண்டுகளில் வெளியில் வந்துவிடலாம்' என்ற தவறான எண்ண ஓட்டத்தை உருவாக்கி விடும்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதால், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற அச்சத்தில், தாங்கள் இக்குற்றத்தை செய்துவிட்டோம். மன்னித்து குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென, மற்ற எதிரிகள் வாதிடக்கூடும்.
உயரதிகாரியாகவே இருந்தால் கூட, கடமை மிக்கவர்களாக மற்றவர்கள் இருந்திருந்தால், ஸ்ரீதரை பற்றி உயரதிகாரிகளிடம் முறையிட்டு, ஜெயராஜ், பென்னிக்ஸை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், ஈவு இரக்கம் இல்லாமல் போலீசார் நடந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை குறித்த வீடியோ பதிவு, போட்டோக்களை பார்க்கையில், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாது. உச்ச நீதிமன்றம் பலமுறை கடுமையாக சாடியும், போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையை பண்பாடு, நாகரிகத்தால் முன்னேறிய சமூகத்தில் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
கருணை இல்லை
ஒரு புழு பூச்சியை போல், இருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியது நீதியின் மனசாட்சி, சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. ஆயுள் தண்டனை போதும் என்று கூறுவதற்கு வழியே இல்லாத வகையில் இவ்வழக்கை, 'அரிதிலும் அரிதான' என்ற பிரிவுக்குள் கொண்டு வர நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
போலீஸ் ஸ்டேஷனில் மரணங்கள் கொடூரமானது. குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பதில் எந்த கருணையும் காட்டப்படக்கூடாது என, உச்ச நீதிமன்றம் 2011ல் உத்தரவிட்டது. இனியும் இத்தகைய குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு துாக்கு தண்டனை ஒன்று தான் பரிசாக கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தால் தான், ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.
இவ்வழக்கை பொறுத்தவரை, யார் அதிகமாக காயப்படுத்தினர் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது போலீஸ்காரர்களும் கூட்டாக குற்றம் செய்துள்ளனர். எனவே, ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீஸ்காரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
திராவிட கட்சிகளால் அனைத்து துறைகளும் மிருகத்தனமான செயல்களிலும் ஊழல்களிலிலும் , சிறந்து விளங்குகின்றன,காரணம் தகுதியற்ற திறமையற்ற, அறிவற்ற அரைகுறையாக படித்த இட ஒதுகீட்டில் வந்த ஆட்கள் கடந்த ஐந்து வருட கருணாநிதி குடும்ப ஆட்சி கொடுங்கொலன் ஆட்சி
இது உண்மையிலே அருவருக்கதக்க குற்றம்தான்.சந்தேகமேயில்லை.ஆனால் இக் கற்றம் நடந்தது எந்த ஆட்சியில்? இதே ஆட்சியில்தான் தூத்துக்குடியில் 17 அப்பாவிகள் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதையும் விசாரித்து இதை தூண்டிய அன்றைய ஆட்சியாளர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர்களை ரிமாண்ட் செய்த நீதிபதி எந்தளவுக்கு இழிபிறவி? அவர்களை சிறையில் அடைக்கும் முன் பரிசோதனை செய்த அந்த மருத்துவனுக்கு என்ன தண்டனை? இவர்களுக்கும் தண்டனை கொடுத்திருந்தால் மற்றவர்களுக்கும் பயம் வரும்.
ஒண்ணு தூக்கு தண்ட்ச்னை குடுங்க. இல்லே அந்த ஒன்பது பேரையும் கையைக் காலை கட்டி ஒரு நாளைக்கி பொதுமக்களிடம் ஒப்படையுங்க. அப்புற பொழைச்சுக் கிடந்தா போய்த்தொலையட்டும்.
குற்றவாளிகளை உடனடியா தூக்கில் போடவேண்டும்.. அவர்களை மேல் முறையிடு செய்ய அனுமதிக்க கூடாது.
குற்றவாளிகளை சீக்கிரம் தூக்கில் போடுங்க.
Scotland yard police Tamilnadu become Badland yard police. Congratulations to Honourable MK Stalin the Chief Minister of Tamilnadu.
போலீஸ் என்றால் வானளாவிய அதிகாரம் கொண்டவர்கள் என்ற அகங்காரம் தான் இந்த இரண்டு அப்பாவிகளை துன்புறுத்தி கொல்லுமளவுக்கு கொண்டுசென்றிருக்கிறது. இவர்களை காப்பாற்ற கருப்பு அங்கி போட்ட பணப்பிசாசுகள் தயாராக இருக்கும் , ஆனால் நீதி எல்லோருக்கும் சமம் என்பது உண்மையெனில் இந்த குற்றவாளிகளை தூக்கிலேற்றவேண்டும் .
5 ஆண்டுகள் ஓடிவிட்டாலும் அருமையான தீர்ப்பு அய்யா. அரசியல்வாதிகளிடமும் ரவுடிகளிடமும் பயந்து பம்மும் இந்த கையாலாகாத காவல்துறை ஏழைகளையும் நல்லவர்களையும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களையும் துன்புறுத்தி தங்களை வீரர்களாக காட்டிக்கொள்கின்றனர்.
தீர்ப்பு மிக நேர்தியானது இதில் யாரும் எதிர்மறை விமர்சனங்கள் வைக்கமாட்டர்கள் என நம்புகிறேன் அதாவது ஒன்பது போலீஸ்கார குடும்பங்களையும் சேர்த்துமேலும்
-
கோவில் நகரங்களில் வீரமணிக்கு அனுமதி இல்லை; பிரசாரத்துக்கு தடை போட்டது திமுக
-
ராணுவ தடகள வீரர்களுக்கான இளம் சிறுவர் தேர்வு முகாம்
-
தமிழக அரசின் தலைமை செயலர் மாற்றம் ; தேர்தல் ஆணையம் உத்தரவு
-
மாவட்டத்தில் இ-பாஸ் சோதனை பணியில் தொய்வு :இரவு, அதிகாலையில் ஏராளமான வாகனங்கள் வருகை
-
யானையிடம் உயிர் தப்பியவர் மருத்துவமனையில் அனுமதி
-
திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி திருவிழா