உளுந்துார்பேட்டையில் வேளாண் கல்லுாரி :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அரசு வேளாண் கல்லுாரி கொண்டுவரப்படும் என அ.தி.மு.க.. வேட்பாளர் குமரகுரு உறுதி அளித்தார்.

உளுந்துார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு கூறுகையில்; உளுந்துார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க.. வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுகேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்களிடம் எழுச்சி எழுந்துள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராகி நல்லாட்சி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உளுந்துார்பேட்டை தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முதன்மையாக நிறைவேற்றி தரப்படும். இங்கு, அரசு வேளாண் கல்லுாரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும்.

தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். பெண்களுக்கு உதவி தொகை உயர்த்தி தருவதுடன், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். கூட்டுறவு மற்றும் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்.

அதனை தொடர்ந்து நடந்த தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், ஏகாம்பரம், சந்திரன், சுப்புராயன், நகர செயலாளர் துரை, பா.ஜ., பொறுப்பாளர் அருள், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜாமணி, பா.ம.க., மாவட்ட செயலாளர் சத்யா, ஐ.ஜே.க., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், புரட்சி பாரதம் மாநிலத் துணைச் செயலாளர் ஆறுமுகம், பகுஜன் சமாஜ் கட்சி முருகன், வெங்கடேசன், காமேஷ், கிளாப்பாளையம் முருகன் உள்ளிட்டோர் ஓட்டு சேகரித்தனர்.

Advertisement